பேசி பேசியே எங்களுக்குள்ள லவ்..!! முதல் முறையாக சொன்ன மணி !! கியூட்டான ரவீனாவின் ரியாக்ஷன்!!

Bigg Boss Tamil
By Karthick Oct 11, 2023 04:19 PM GMT
Report

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதும் போல இந்த வருடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிக் பாஸ் 7

 அக்டோபர் 1-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் துவங்கியது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் அறிமுகமான போட்டியாளர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

mani-opens-about-love-with-raveena-daha-in-bbhouse

முதல் வார முடிவில் அனன்யா எலிமினேட்டாக, பாவா லட்சுமணன் தானாக முன்வந்து வெளியேறினார். ஜோவிகா - விசித்ரா சண்டை, மாயா பிரதீப் போன்றவர்களின் செயல் என பலதும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரவீனா டாகா மற்றும் நடன கலைஞரான மணி சந்திரா இருவரும், காதலர்கள் என பல காலமாக பேசப்பட்டு வரும் நிலையில் அது குறித்து நிகழ்ச்சியில் முதல் முறையாக மணி சந்திரா பேசியிருக்கிறார்.

விசித்ரா மணி மற்றும் ரவீனாவிடம், "நீங்கள் இருவரும் காதலர்கள் தானே? என்று கேட்க, அதற்கு ரவீனா எனக்கு புரியல நீங்க சொல்லுங்க மணி என்றார். அப்போது மணி, தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்றும் ஒரு புரிதல் இருக்கு என்று கூறினார்.

mani-opens-about-love-with-raveena-daha-in-bbhouse

நாங்க இருவரும் காதலர்கள் என்றும் எங்கேயும் சொன்னது இல்லை அப்போது ரவீனாவும் சொன்னார். உடனே மணி, நீங்க பேசியே வரவச்சுடுவீங்க என்று விசித்ராவிடம் கூற, மணி கன்னத்தில் ரவீனா அறைந்தார். இந்த காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.