மங்கல்யான் செயற்கைகோள் எரிபொருளின்றி செயலிழந்தது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

By Thahir Oct 03, 2022 05:08 AM GMT
Report

மங்கல்யான் விண்கலம் எரிபொருள் தீர்ந்ததால் அதன் செயல்பாடுகள் செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மங்கல்யான் செயல்பாட்டை நிறுத்தியது 

இந்தியாவின் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2013 ஆண்டு ரூ.450 கோடி ரூபாய் செலவில் பிஎஸ்எல்வி-25 ராக்கெட் மூலம் மங்கல்யான் செயற்கைகோள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் மங்கல்யான் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மங்கல்யான் விண்கலம் திடீரென தனது செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில் மங்கல்யான் செயற்கைகோளில் தற்போது எரிபொருள் தீர்ந்துவிட்டது.அதன் பேட்டரியும் செயல் இழந்துள்ளது.

இதன் காரணமாக விண்கலமானது தனது தொடர்பை துண்டுடித்துவிட்டது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

வடிவமைப்பு 

மங்கல்யான் விண்கலம் ஒரு மணி நேரம் 40 நிமிடம் கிரகத்தை தாங்கும் வகையில் அதன் பேட்டரி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு கிரகணம் 7 1\2 மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக பேட்டரியின் செயல்பாடு திறன் குறைந்துவிட்டது.

மங்கல்யான் செயற்கைகோள் 6 மாதங்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.ஆனால் 8 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருந்தது.

மங்கல்யான் செயற்கோள் பல அறிவியல் சார்ந்த தகவல்கள், தொழில்நுட்பம் வடிவமைப்பு போன்ற ஆய்வுகளை செய்தது.

மங்கல்யானில் 15 கிலோ கிராம் கொண்ட 5 அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வந்த மங்கல்யான் விண்கலம் தனது செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.