தமிழகத்தில் பயங்கரவாத அமைப்பை நிறுவ முயன்ற ஷாரிக் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
மங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தற்போது என்.ஐ.ஏ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குக்கர் குண்டுவெட்டிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக்கின் செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் மங்களூரில் 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாரிக் செல்போன்
இந்த நிலையில் ஷாரிக்கின் செல்ப்போனில் பேச்சாளர் ஜாகீர் நாயக் பேசிய 50 -க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளன.இவரின் பேச்சுதான் பயங்கரவாத செயலில் ஷாரிக் ஈடுபட தூண்டுகோளாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் வெடிப்பொருட்களை வாங்கவும், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருக்கவும் 'டார்க்நெட்' என்ற இணையதளத்தை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்த திட்டம்
மேலும் ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கு சென்றுள்ளார். அங்குள்ள வனப்பகுதிக்கும் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பயங்கரவாத அமைப்பை நிறுவ ஷாரிக் முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வனப்பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு ஒரு மதத்தின் அமைப்புகள், வழிபாட்டு தலங்கள் மீது நாசவேலைகளை அரங்கேற்றவும், அந்த அமைப்பின் தலைவர்களை கொல்லவும் சதி திட்டம் தீட்டி உள்ளார்.
மேலும் தென்னிந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுடனும் ஷாரிக்கிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடைபெற்றுவருகின்றது