மங்களூர் குண்டு வெடிப்பு...ஷாரிக் மதுரையில் தங்கினாரா? NIA அதிகாரிகள் விசாரணை
மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக் மதுரையில் தங்கியதாக தகவல் வெளியான நிலையில் மதுரையில் NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மங்களூருவில் கடந்த 19ம் தேதி சாலையில் சென்ற ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் சென்ற ஆட்டோ டிரைவர் மற்றும் ஷாரிக் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோவில் சென்ற ஷாரிக் வெடிக்கச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிய ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்க NIA அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ஷாரிக் மதுரையில் தங்கியிருந்ததாக கூறப்பட்ட நிலையில அங்கு தெங்குவாசல், மெஹப்பூப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் NIA அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.