ரேஸ் மாட்டு வண்டி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்தில் பலி - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Karnataka
By Nandhini Jan 12, 2023 07:09 AM GMT
Report

கர்நாடகாவில் ரேக்ளா ரேஸ் மாட்டு வண்டி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேஸ் மாட்டு வண்டி மோதியதில் ஒருவர் பலி

கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது மோதியதில் நாகராஜு (55) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மேலும், ஹுலிவானா கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ரித்திக் பலத்த காயமடைந்தான். தற்போது, அச்சிறுவன் MIMS மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.

இந்தப் போட்டி அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதைக்கு அருகில் மக்கள் செல்வதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்படவில்லை. தற்போது போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

mandya-karnataka-rakla-race-bullock-person-killed