வேகமாக நகரும் மாண்டஸ் புயல் : தமிழகத்தில் மிரட்ட போகும் கன மழை
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் உருவாகி உள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட்விடுக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல்
அதேபோல் சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. மாண்டஸ் புயலானது மெதுவாக நகர்ந்துவருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 460 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது.
அதிகரிக்கும் வேகம்
இதுமேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.புயலானது புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 10ம் தேதி கனமழை பெய்யும் என்றும். டெல்டாவில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.