?LIVE: தேனி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக தேனி, துாத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
நெருங்கும் மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது.
இன்று இரவு புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 5ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது.
பின்னர் வட-மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை
இந்த புயல் சென்னையில் இருந்து 320 கிமீ தொலையில் உள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கல்வி நிலையங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். ஏற்கனவே 22 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில்,
தற்போது தேனி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துாத்துக்குடி, கரூர் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.