Saturday, May 17, 2025

எச்சரிக்கை மக்களே : தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட்

By Irumporai 2 years ago
Report

 மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 மாண்டஸ் புயல்

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நேற்று அது மீண்டும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

எச்சரிக்கை மக்களே : தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் | Mandous Cyclone Red Alert

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு 11.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. 

 தமிழகம் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்

இந்நிலையில் மாண்டஸ் புயல் பணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே 9ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கையில் மணிக்கு 85 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் என கூறியுள்ளது.