? Live: மாண்டஸ் புயல் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரையில் ஆய்வு..!

Puducherry Mandous Cyclone
By Nandhini Dec 09, 2022 01:19 PM GMT
Report

புதுச்சேரி கடற்கரை பாதிப்பு நிலவரங்களை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வழுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினம் அருகே இருக்கும் இந்த மாண்டஸ் புயல் காரணமாக வடக்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் கனமழை மற்றும் தீவிர காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ துாரத்தில் மையம் கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது.

இதனால் நாளை சென்னை, காஞ்சிபுரம், வேலுார், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

mandous-cyclone-puducherry-cm-rangaswamy

புதுச்சேரி முதலமைச்சர் ஆய்வு

புதுச்சேரி கடற்கரை பாதிப்பு நிலவரங்களை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மகாபலிபுரத்தை சுற்றி இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை நிலச்சரிவை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரை நிலத்தின் நிலவரத்தை ஆய்வு மேற்கொண்டார்.