கோரத்தாண்டவம் ஆடிய மாண்டஸ் புயல் - இருவர் உயிரிழப்பு
Chennai
TN Weather
Weather
Mandous Cyclone
By Thahir
மாண்டஸ் புயல் காரணமாக மின் வயர் அறுந்து விழுந்து சென்னையில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.
மடிப்பாக்கம் ராம்நகர் பகுதி 7வது தெரு பகுதியில் லட்சுமி(45) என்பவரும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று நள்ளிரவில் சுமார் 75 கி.மீ வேக புயல் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மரங்கள், மின்கம்பங்கள், சிக்னல்கள் விழுந்த நிலையில் மடிப்பாக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.