? Live: கன்னியாகுமரி மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தில் கடல் உள்வாங்கியது - மீனவர்கள் அதிர்ச்சி

TN Weather Weather Mandous Cyclone
By Thahir Dec 09, 2022 06:23 AM GMT
Report

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது.

விட்டு விட்டு பெய்யும் கனமழை 

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது.

கடல் உள்வாங்கியது

மேலும் கடலோர பகுதிகளில் கடல் உள்வாங்கும் நிகழ்வும் நடந்து வருகிறது. தூத்துக்குடியில் பீச் ரோடு கடற்கரை பகுதியில் 30 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது.

? Live: கன்னியாகுமரி மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தில் கடல் உள்வாங்கியது - மீனவர்கள் அதிர்ச்சி | Mandous Cyclone Absorbed By The Sea

இதனால், கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் கரைதட்டி நிற்கின்றன. அதே போல கன்னியாகுமரி கடலும் 10 அடிக்கு உள்வாங்கியுள்ளது.

இதனால் கடலில் உள்பகுதியில் உள்ள பாசி படர்ந்த பாறைகள் வெளியில் தெரிகின்றன. மேலும் எப்போதும் அலைகள் சீறிப்பாயும் கடல் தற்போது அமைதியாக இருக்கிறது.