மறைந்த காதல் கணவருக்கு இறுதிச் சடங்குகளை செய்த பிரபல நடிகை

Actress mandira bedi Director Raj kausal funeral
By Petchi Avudaiappan Jun 30, 2021 05:14 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 நடிகை மந்திரா பேடி தனது காதல் கணவர் ராஜ் கௌஷலின் இறுதிச் சடங்குகளை தானே செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் நடிகை மந்திரா பேடி மற்றும் அவரது கணவரான திரைப்பட இயக்குநரான ராஜ் கௌஷல் தம்பதியினர்.1999-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு வீர் மற்றும் தாரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மறைந்த காதல் கணவருக்கு இறுதிச் சடங்குகளை செய்த பிரபல நடிகை | Mandira Bedi Bids Husband An Emotional Goodbye

இந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு ராஜ் கௌஷல் மரணமடைந்தார். இந்த தகவல் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜ் கௌஷல் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, ராஜ் கௌஷல் இறுதி சடங்குகளை மரபுகளை உடைத்து மந்திரா பேடியே செய்தார். பாரம்பரிய இந்து முறைப்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.