“அந்த முன்னணி இயக்குனரால் நான் கர்ப்பமானேன்..ஆனால் அவர்” - நடிகைக்கு நிகழ்ந்த சோகம் ; கண்கலங்கிய பிரபலங்கள்
பாக் ஜானி, ராய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை மந்தனா கரீமி.
ஈரான் நாட்டை சேர்ந்த இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2-ம் இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனாவத் லாக் அப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சினிமா பிரபலங்கள், தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.
அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் நடிகை மந்தனா கரீமியும் பங்கேற்றார். அதில், சமீபத்திய எபிசோட்டில் கரீமியிடம் உங்களிடமுள்ள ஒரு ரகசியம் பற்றி கூறுங்கள் என கேட்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில், வெளியேற்றுதல் சுற்றில் இருந்து தப்பிப்பதற்காக தனது வாழ்க்கையின் மிக பெரிய ரகசியத்தை மந்தனா பகிர்ந்துள்ளார்.
அப்போது , பெண் உரிமைகள் பற்றி பேசும், பலருக்கு கடவுளாக இருக்கும் பிரபல முன்னணி இயக்குனர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட ரகசிய உறவு பற்றி அவர் கூறும்போது,
“எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு ஒரு சில மாதங்களிலேயே வலுப்பெற்றது. இதனால், என்னுடனேயே வாழ அந்த இயக்குனர் திட்டமிட்டார். ஆனால், இதனை வெளியில் யாருக்கும் கூறாமல் ரகசியம் காப்பது என இருவரும் முடிவு செய்தோம்.
ஏனெனில், எனது முன்னாள் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக நான் பொறுமை காத்திருந்தேன். இதன்பின் நான் கர்ப்பமடைந்தேன், இதனை அவரிடம் கூறியபோது அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த பொறுப்புகளை ஏற்று கொள்ளும் அளவுக்கு மனதளவிலும், உணர்வுரீதியிலும் நான் இன்னும் தயாராகவில்லை என அவர் என்னிடம் கூறினார். மேலும் அவரது நண்பரிடம் இதுபற்றி கூறி என்னை கருகலைப்பிற்கு சம்மதிக்கவைக்க முயற்சித்தார்.
அவர் தொடர்ந்து இதில் உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி என்னை நான் தயார் செய்துகொண்டு கருவை கலைத்தேன்” என மந்தனா கூறினார்.
அவரின் இந்த கதையை கேட்டு சக போட்டியாளர்கள் மட்டுமின்றி நடிகை கங்கனா ரணாவத்தும் கண்கலங்கினார்.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan
