மீம்ஸ் போட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்பேன் - எச்சரிக்கை விடுக்கும் பிரபல நடிகர்
தங்களது குடும்பத்தை பற்றி இனிமேல் யாராவது மீம்ஸ் போட்டால் அவர்கள் மீது ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என நடிகர் விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார்.
நாகார்ஜுன் குடும்பம், சிரஞ்சீவி குடும்பம், மகேஷ்பாபு குடும்பம், மோகன்பாபு குடும்பம், பாலகிருஷ்ணா குடும்பம் என தெலுங்கு சினிமா உலகை இத்தகைய குடும்பங்கள் தான் அதிகளவில் ஆண்டு வருகின்றன.
இதில் மோகன்பாபுவின் குடும்பத்தை சேர்ந்த விஷ்ணு மஞ்சு சமீபத்தில் நடந்த தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தொடர்ந்து மோகன் பாபு நடித்த சன் ஆஃப் இந்தியா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதனை கிண்டல் செய்து அதிகளவில் இணையத்தில் மீம்ஸ்கள் உலா வந்தது. இதனால் கடுப்பான விஷ்ணு நாங்களும் ஜாலியாகவே மஞ்சு ரசிக்கக்கூடிய மீம்ஸ்களை எடுத்துக் கொள்வோம்.
ஆனால் எங்கள் குடும்பத்தை பற்றி விமர்சித்தால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனவும் விஷ்ணு மஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளார்.