ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம்!

ipl interest manchester unitedowners
By Irumporai Oct 21, 2021 06:46 AM GMT
Report

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் போட்டியில் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப், ஐதராபாத், டெல்லி ஆகிய 8 அணிகள் உள்ளன.

இந்த நிலையில் அடுத்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகளை சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்கான டெஸ்டரும் விடப்பட்டியிருந்தது. இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம்! | Manchester United Owners Interest Buying Ipl

உலக அளவில் புகழ் பெற்ற கால்பந்து அணி கிளப்புகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவித்ததால் ஐபிஎல் அணிக்கான டெண்டர் தேதி நீட்டிக்கப்பட்டது.

அக்.5 வரை , இருந்த டெண்டர் தேதி 10 வரை நீட்டிப்பு செய்ததற்கு மான்செஸ்டர் நிர்வாகமே காரணம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் கிரிக்கெட் அணியை வாங்கும்பட்சத்தில் ஐபிஎல் புகழ் இன்னும் பெரியளவில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில்,  உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.