56 ஆண்டுகளுக்கு பிறகு மணப்பாறை நகராட்சியை கைப்பற்றியது அதிமுக

ManapparaiMunicipal ManapparaiMunicipalChairman AdmkWin DmkFailed
By Thahir Mar 04, 2022 08:47 AM GMT
Report

மணப்பாறை நகராட்சியை அ.தி.மு.க கைப்பற்றியது. கடும் போட்டியில் முதல் முறையாக அ.தி.மு.க வசமானது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 11 இடங்களிலும், அதிமுக 11 இடங்களிலும் வெற்றி பெற்று சமபலத்தடன் இருந்தது.

56 ஆண்டுகளுக்கு பிறகு மணப்பாறை நகராட்சியை கைப்பற்றியது அதிமுக | Manapparai Municipal Admk Chairman Win

இதில் வெற்றி பெற்ற 5 சுயேட்சைகள் தீர்மானிப்பவர்களே மணப்பாறை நகராட்சியை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது.

இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு கீதா.மைக்கேல்ராஜ் என்பவரும், அதிமுக சார்பில் சுதா பாஸ்கரன் போட்டியிட்டனர்.

மொத்தம் பதிவான 27 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் 15 வார்டுகளில் திமுக வேட்பாளர் 12 வாக்குகளும் பெற்றனர்.

இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த சுதா பாஸ்கரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 56 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மணப்பாறை நகராட்சி அதிமுக கைப்பற்றியுள்ள நிலையில் அதிமுகவினர் அதன் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.