மாநாடு அப்டேட் - யுவன் ஷங்கர் ராஜா ட்வீட் : ரசிகர்கள் உற்சாகம்..!

update movie yuvan tweet maanadu
By Anupriyamkumaresan Jun 04, 2021 10:15 AM GMT
Report

'மாநாடு' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 'மாநாடு' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மலையாள நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் .

’மாநாடு’ படத்தின் பாடல் வெங்கட் பிரபு பிறந்தநாளன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் அவரது தாயார் மறைந்ததால் படக்குழுவினர் பாடல் வெளியீட்டைத் தள்ளி வைத்தனர்.

மாநாடு அப்டேட் - யுவன் ஷங்கர் ராஜா ட்வீட் : ரசிகர்கள் உற்சாகம்..! | Manadu Movie Update Yuvan Tweet

அதன்பிறகு கொரோனா காலத்தில் பாடலை வெளியிடுவது சரியாக இருக்காது என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது யுவன் ’மாநாடு’ படத்தின் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து சிம்பு மற்றும் யுவன் ஷங்கர் ரசிகர்கள் ஆக்டிவ் மோடுக்கு வந்து அதைக் கொண்டாடி வருகின்றனர்.