சாப்பிட்டது ரூ.279 பிரியாணி; அதிர்ஷ்டம் அடித்தது ரூ. 7 லட்சம் கார் - மகிழ்ச்சியில் வாலிபர்!

India Andhra Pradesh Biriyani
By Jiyath Jan 03, 2024 06:14 AM GMT
Report

தனியார் ஹோட்டல் ஒன்று தங்கள் கடையில் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு கார் பரிசாக வழங்கியுள்ளனர்.   

கார் பரிசு

திருப்பதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று கடந்த செப்டபர் மாதம் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

சாப்பிட்டது ரூ.279 பிரியாணி; அதிர்ஷ்டம் அடித்தது ரூ. 7 லட்சம் கார் - மகிழ்ச்சியில் வாலிபர்! | Man Wins Car After Eating Biryani Tirupati

அதில் பிரியாணி சாப்பிடுவோருக்கு மாபெரும் பரிசு காத்திருக்கிறது என்று தெரிவித்தனர். பின்னர் அந்த ஹோட்டலில் ரூ. 279 மதிப்புள்ள பிரியாணி சாப்பிட்ட 23,000க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன்கள் வழங்கினர்.

மேலும், புத்தாண்டை முன்னிட்டு இதில் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

பிரியாணி ஏன் சூடா இல்ல..? உருட்டுக்கட்டையால் அடிதடி - பழமை வாய்ந்த ஹோட்டலில் பரபரப்பு!

பிரியாணி ஏன் சூடா இல்ல..? உருட்டுக்கட்டையால் அடிதடி - பழமை வாய்ந்த ஹோட்டலில் பரபரப்பு!

அதிர்ஷ்டசாலி

இந்நிலையில் கடந்த 31ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஹோட்டல் நிர்வாகிகள் அந்த ஒரு அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.

சாப்பிட்டது ரூ.279 பிரியாணி; அதிர்ஷ்டம் அடித்தது ரூ. 7 லட்சம் கார் - மகிழ்ச்சியில் வாலிபர்! | Man Wins Car After Eating Biryani Tirupati

அதில் திருப்பதியை சேர்ந்த ராகுல் என்பவரது டோக்கனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இதனையடுத்து அவர் மகிழ்ச்சியுடன் காரை பரிசாக பெற்றுச் சென்றார்.

பிரியாணிக்கு கார் வழங்கும் இந்த திட்டத்தால் தங்கள் ஹோட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.