12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - கட்டட மேஸ்திரி கைது
விழுப்புரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கட்டட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருக்கும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இவர் கட்டட வேலைக்கு சென்றுகுடும்பத்தை கவனித்து வருகிறார். அந்தப்பெண்ணுடன் புதுச்சேரியை சேர்ந்த கட்டட மேஸ்திரியான மணிகண்டன் என்பவர் உடன் வேலை செய்து வந்துள்ளார்.
இதனிடையே மாணவிக்கு சில தினங்களாக உடல்நலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. மகளை கட்டட மேஸ்திரியான மணிகண்டனுடன் அப்பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மாணவியும் மணிகண்டனும் சினிமாவுக்கு சென்றுள்ளனர். திரையரங்கில் இருந்து திரும்பி வரும் போது மாணவி மயக்கம் வருவதாக கூறியுள்ளார். அருகில் உள்ள விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு பிறகு வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறி மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மாணவி மயக்க நிலையில் இருந்த போது சிறுமி என்றும் பாராமல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து கட்டட மேஸ்திரி மணிகண்டன் மீது விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.