நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வீச்சு - ஓட ஓட துரத்தி வெட்டிய கும்பல்!
Crime
Chengalpattu
By Jiyath
நீதிமன்ற வளாகத்தில் ஆஜராக வந்த நபரை நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம கும்பல் கொலை செய்துள்ளனர்.
வெட்டிக்கொலை
செங்கல்பட்டில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த லோகேஷ் (28) என்ற நபரை அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அதில் இருந்து தப்பி ஓடியபோது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செத்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் கூடியதால் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர்.
போலீசார் குவிப்பு
இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதி மன்ற வளாகத்தில் போலீசார் ஸர் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபரின் வழக்கில் தொடர்புடைய எதிர்தரப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.