விஜய் வீட்டு மாடியில் பதுங்கிய மர்ம நபர் - Y பிரிவை மீறி அதிர்ச்சி!
விஜய் வீட்டுக்குள் ஏறி குதித்த நபர் மொட்டை மாடி வரை சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
விஜய் வீடு
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் நீலாங்கரை வீட்டில் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்துள்ளார்.
இதனை பார்த்து விஜய் வீட்டில் வேலை செய்யும் நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அந்த இளைஞர் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பதுங்கிய மர்ம நபர்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மொட்டை மாடியில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும்,
மதுராந்தகத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் அருண் (24) என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
இவ்வளவு பாதுகாப்புகளையும் மீறி அவர் எப்படி சென்றார்? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.