காதலியின் ஹேண்ட் பேக்கில் உச்சா போன காதலர் : நீதி மன்றம்கொடுத்த தண்டணை என்ன தெரியுமா?
தென்கொரியாவில் காதலியிடம் சண்டையிட்டு அவரை பழிவாங்கும் நோக்கில் அவரது ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
காதலியிடம் வம்பு
தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் தனது காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார் அப்போது இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறி உள்ளது.

இதில் கோபம் அடைந்த காதலன் நேராக காதலியின் அறைக்குள் சென்று அவரது விலை உயர்ந்த லூயிஸ் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்துள்ளார்.
ஹேண்ட்பேக்கில் சிறுநீர்
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த பெண் தனது விலை உயர்ந்த ஹேண்ட் பேக்கில் , சிறுநீர் கழித்ததற்காகநஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது , அந்த பெண்ணின் காதலர் சிறு நீர் கழிக்கவில்லை என மழுப்பியுள்ளார், ஆனால் நீதிமன்றம், டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் காதலன் பெண்ணின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்தது நிரூபணமாகியது.
இதனையடுத்து அந்த காதலன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு, அபராதமாக 1,150 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.91,634 விதிக்கப்பட்டுள்ளது.