‘போனை முழுங்கிட்டேன்’ - இளைஞரால் அதிர்ந்த மருத்துவமனை நிர்வாகம்
கொசோவோ நாட்டில் அறுவை சிகிச்சை மூலம் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து செல்போன் அகற்றப்பட்டுள்ளது.
கொசோவோ நாட்டின் பிரிஸ்டினா பகுதியைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்று தான் செல்போனை வாயின் அருகே வைத்து பேசிக் கொண்டிருந்தபோது விழுங்கியதாக தெரிவித்துள்ளார்.
அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். உடனே அவருக்கு எக்ஸ்ரே மற்றும் எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டு வயிற்றில் செல்போன் இருக்கும் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டது.
அதேசமயம் வயிற்றுக்குள் சென்ற செல்போனின் பேட்டரி தனியாக பிரிந்தும் கிடந்துள்ளது. கிட்டதட்ட மருத்துவர்கள் 2 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த செல்போன் அகற்றப்பட்டது.
மருத்துவர் டெல்ஜாகு தனது பேஸ்புக் பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட செல்போனின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் பேட்டரி மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும் என்பதால் இந்த அறுவைச் சிகிச்சை தங்களுக்கு மிக கவலையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.