மணமகனுக்கு சிரித்துக் கொண்டே மஞ்சள் பூசிய நபர்... - திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்...- வீடியோ வைரல்...!

Viral Video Telangana Death
By Nandhini Feb 24, 2023 11:02 AM GMT
Report

தெலுங்கானாவில், திருமணத்திற்கு முன் மஞ்சள் பூசும் நிகழ்ச்சியில், மணமகனுக்கு சிரித்துக் கொண்டே மஞ்சள் பூசிக் கொண்டிருந்த உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சள் பூசிய நபர் திடீரென உயிரிழந்தார்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

ஹைதராபாத், தெலங்கானா, காலா பட்டாரில் நடந்த திருமண விழாவில் முகமது ரப்பானி என்ற 40 வயது நபர், மணமகனுக்கு மஞ்சள் பூசிக்கொண்டிருந்தார்.

மாப்பிள்ளை முன் அமர்ந்து, மணமகனிடம் சிரித்துக் கொண்டே மஞ்சள் பூசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சரிந்து அப்படியே மயங்கி கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன உறவினர்களும், மணமகனும் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அழைத்துக் கொண்டு சேர்த்தனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருமணத்திற்கு முன் மஞ்சள் பூசும் நிகழ்ச்சியில் உறவினர் இறந்த சம்பவம் திருமண வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.       

man-suddenly-dies-during-wedding-ritual