பெற்றோரை பலமுறை கத்தியால் குத்திய மகன்! திடுக்கிட வைக்கும் சம்பவம்

By Fathima Feb 12, 2026 05:14 AM GMT
Report

இந்தியாவின் பெங்களூரில் பெற்ற தாய்- தந்தையை மகன் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் விஜயநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினர் Naveen Chandra Bhat(வயது 60), கடற்படை முன்னாள் கேப்டன் மற்றும் Shyamala Bhat(வயது 55), பல் மருத்துவர்.

இவர்களது மகன் Rohan Chandra Bhat, அமெரிக்காவில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை 8 மணியளவில் ரத்த வெள்ளத்துடன் பெற்றோரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொலை செய்த இளம்பெண்! நடந்தது என்ன?

விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொலை செய்த இளம்பெண்! நடந்தது என்ன?


அங்கே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், இதனை தொடர்ந்து தலைமை மருத்துவர் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில் Rohan Chandra Bhat-யை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.

தன்னுடைய பெற்றோரை குத்திக்கொன்றதை ஒப்புக்கொண்டார், சம்பவதினத்தன்று பெற்றோருக்கும், தனக்கும் வாக்குவாதம் எழ ஆத்திரத்தில் கத்தியால் பலமுறை குத்தியுள்ளார்.

சொத்து தகராறு காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர், எனினும் உண்மையான காரணம் தெரியவில்லை.  

பெற்றோரை பலமுறை கத்தியால் குத்திய மகன்! திடுக்கிட வைக்கும் சம்பவம் | Man Stabs Parents