மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மாமியாருக்கு நேர்ந்த கதி - கணவன் செய்த செயலால் அதிர்ச்சி

Attempted Murder
By Petchi Avudaiappan May 18, 2022 09:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மனைவி வீட்டில் இல்லாத கோபத்தில் மாமியாரை மருமகன் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் ரமேஷ் என்பவர் மனைவி திவ்யாவுடன் வசித்து வந்தார். இதனிடையே   கணவருக்கு தன் மீது சந்தேகம் இருப்பதாக எண்ணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரமேஷை திவ்யா பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து நேற்று ரமேஷ் மனைவியைப் பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திவ்யா படிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளதை அறிந்து அவர் ஆத்திரமடைந்துள்ளார்.  இதனால் கோபத்தில் தனது மாமியார் வெங்கடரமணம்மாவிடம் தகராறு செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து மாமியாரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடரமணம்மா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பிதாபுரம் டவுண் போலீசார் தலைமறைவாகியுள்ள ரமேஷை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.