யூத பெண்ணை தாக்கி வெறிச்செயல்..!! குறியீடாக "ஸ்வஸ்திகா" சின்னம் !! மர்மநபரால் பரபரப்பு!!
பிரான்ஸ் நாட்டில் யூத பெண்ணை படுகாயமடையச்செய்து ஸ்வஸ்திகா சின்னத்தை குறியீடாக விட்டுச்சென்றுள்ள நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றார்.
வெறிச்செயல்
பிரெஞ்சு நாட்டின் லியோனில் என்ற நகரில் வசித்து வரும் யூத பெண்ணை கத்தியால் குத்தி படுகாயமடைய செய்துள்ளார் அப்பெண்ணின் மர்மநபர் ஒருவர். தகவல் அறிந்து போலீசார் அப்பெண்ணின் இல்லத்திற்கு விரைந்த போது, அந்த பெண்ணின் வீட்டின் கதவில், இருந்த குறியீடு தான் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
முன்னதாக இந்த தாக்குதல் குறித்து பேசும் போது, "இத்தகைய வன்முறைச் செயல் நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன்" என்று Lyon நகரின் மேயர் Gregory Doucet தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த குறியீடு ஸ்வஸ்திகா சின்னம் தான். அந்நாட்டின் தேசிய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தாக்குதலில் ஈடுபட்ட நபர் பற்றிய கூடுதல் விவரங்களைத் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஸ்வஸ்திகா இல்லை
அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து, உலகெங்கிலும் உள்ள நாடுகளில், யூத-விரோத மற்றும் இஸ்லாமிய வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுவருகின்றது. மேலும் இந்தத் தாக்குதலை ஒரு யூத-விரோத வெறுப்புக் குற்றமாக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் உண்மையில் அது ஸ்வஸ்திகா குறியீடு இல்லை என்றும் அது யூதர்களின் மத ரீதியிலான சின்னமான ஹேகன்க்ரூஸ்(HakenKruz) என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.