கல்யாணம் முக்கியம் இல்ல... கடைசி நேரத்தில் மணமகன் செய்த செயலால் குவியும் பாராட்டு
திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய மாப்பிள்ளை அந்நிகழ்வை தவிர்த்து செய்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பொதுவாக திருமண நிகழ்வுகளில் அவ்வப்போது பல விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். மணப்பெண், மணமகன் மாறுவது, திருமணம் நிற்பது, வானத்தில், நீருக்கடியின் திருமணம் என ஒவ்வொரு செய்திகளையும் பார்க்கும் போது பலருக்கும் வியப்பாக இருக்கும்.
அப்படியான ஒரு சம்பவம் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆறு ஒன்றில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டு தவிக்கிறது. அதனை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில் திருமண நிகழ்வில் பங்கேற்க வேண்டிய நபர் ஒருவர் அந்த பகுதி வழியாக செல்லும் போது இதனை காண்கிறார்.
சிறிதும் தாமதிக்காமல் கல்யாணம் இருக்கிறது என்று பாராமல் கோட்டை கழட்டி விட்டு அங்குள்ள பக்கவாட்டு சுவரின் ஓரத்தில் படுத்தபடி, ஆற்று நீரின் மேற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த நாயை கையை நீட்டி பிடித்து மேலே தூக்குகிறார். இதற்கு அந்த மாப்பிள்ளைக்கு மற்றொரு நபரும் உதவ நாய் பத்திரமாக மீட்கப்பட்டது.
இதன் வீடியோ இணையத்தில் வேகமாக பரவ பலரும் மாப்பிள்ளையின் செயலை பாராட்டி வருகின்றனர்.