ஆண்கள் கண்டிப்பா 2-வது கல்யாணம் செஞ்சிக்கணும்..?விசித்திர கிராமத்தின் கதை
ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணம் செய்ய வேண்டுமெனவும் அதற்கு வியப்பான காரணமும் கூறி வருகின்றன.
வியப்பான கிராமம்
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் தேராசர். இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் ஒவ்வொரு ஆணும் இரண்டு திருமணம் செய்வது தொன்றுதொட்டு பின்பற்றப்படும் பழக்கவழக்கமாக இருந்து வருகிறது. இது விசித்திரமாகத் தோன்றினாலும் இந்த பழக்கவழக்கத்துக்கு பின்னால் இருக்கும் காரணம் மிகவும் வியப்பாக இருக்கிறது.
காரணம்
இந்த கிராமத்தில் முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காது என்றும் குழந்தை பெற்றெடுக்க வேண்டுமானால் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என மக்கள் நம்புகிறார்கள். இந்த பழக்கத்துக்கு பின்னால் ஒரு கதை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட குழந்தை இல்லாத நிலை இருந்திருக்கிறது.பின்னர் இரண்டாவது திருமணம் செய்த பிறகு குழந்தை பிறந்துள்ளது. இதே சம்பவம் தொடர்ந்து அந்த கிராமத்தில் தொடர்ச்சியாக பலருக்கு நடந்ததன் அப்போதிலிருந்து கிராமத்தில் இரண்டாம் திருமணம் செய்யும் நடைமுறை இருந்துவந்துள்ளது.