19 வயது மருமகளை படுக்கைக்கு அனுப்புமாறு மனைவியிடமே கேட்ட கணவர் - கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்!

Sexual harassment Uttar Pradesh Death
By Vinothini Aug 27, 2023 11:11 AM GMT
Report

 ஒருவர் தனது மருமகளை படுக்கைக்கு அழைத்தால் அவரது மனைவி செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொடூர கொலை

உத்தரப்பிரதேச மாநிலம்ன், படவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜேந்திர சிங் 43 வயதான இவருக்கு 40 வயதில் மித்லேஷ் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 4 பிள்ளைகள், இவரது வீட்டு வாசலில் தேஜேந்திர சிங் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

man-sexually-harassed-his-daughter-in-law

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது வீட்டாரிடம் விசாரணை நடத்தியபோது மர்ம நபர்கள் அவரது கழுத்தை அறுத்து சென்றதாக கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணை

இந்நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர், உயிரிழந்தவரின் மனைவி மீது சந்தேகத்தில் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார், அதன்பிறகு அவர் அளித்த வாக்குமூலத்தில், "தினமும் கணவர் குடித்துவிட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்தியது இல்லாமல் 19 வயது மருமகளை தன்னுடன் படுக்கை அனுப்பி வைக்குமாறு டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

man-sexually-harassed-his-daughter-in-law

இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது இவரது கணவர் மதுபோதையில் வீட்டிற்கு வந்தபொழுது ஆத்திரமடைந்த மனைவி கணவரை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனால் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.