நேரலையில் பெண் செய்தியாளரை பின்னால் தொட்ட நபர், கடுப்பான தொகுப்பாளர் - வைரலாகும் வீடியோ!

Viral Video Spain Crime
By Vinothini Sep 15, 2023 06:56 AM GMT
Report

பெண் தொகுப்பாளரை மர்ம நபர் ஒருவர் பின்னால் தொட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேரலை

ஸ்பெயின் நாட்டின் பத்திரிக்கையாளர் இசா பலாடோ மாட்ரிட் என்ற பகுதியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை நேரலையில் அறிக்கை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரது பின்னால் கைவைத்தார், தகாத முறையில் அவர் நடந்துகொண்டது, இந்த பத்திரிகையாளருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

man-sexually-assaulted-women-reporter-in-spain

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டு, நீங்கள் எந்த சேனல் என்று கேட்டது பதிவாகியிருக்கும்.

கைது

இந்நிலையில், அங்கு ஸ்டுடியோவில் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர், இஷாவிடம், “இடைமறித்ததற்கு என்னை மன்னியுங்கள். அவர் உங்களை தொட்டுவிட்டாரா?” என்று கேட்டதும், பெண் பத்திரிகையாளர் தயங்கி ஆம் என்கிறார். இதனால் கோபமடைந்த தொகுப்பாளர், தயவுசெய்து அந்த நபரை கேமராவில் என் முன் கொண்டு வாருங்கள் என கூறினார்.

பெண் நிருபர் அந்த நபரிடம் நாங்கள் எந்த சேனலைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? என்னை தொட்டாயா? நான் நேரலையில் அறிக்கை செய்கிறேன் என்று கூறினார். அந்த நபர் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறினார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.