டாக்ஸியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை - இளைஞர் செய்த ஆபாச செயல்

Mumbai Women
By Karthikraja Dec 12, 2024 05:30 PM GMT
Report

ஷேர் டாக்ஸியில் கல்லூரி மாணவியை பார்த்து இளைஞர் ஆபாசமாக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஷேர் டாக்ஸி

மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி ஒருவர், கல்லூரி முடித்து கிராண்ட் சாலைக்கு செல்ல டாக்ஸி ஒன்றில் ஏறியுள்ளார். 

mumbai share taxi

ஷேர் டாக்ஸி என்பதால், வாகனத்தில் ஏற்கனவே இளைஞர் ஒருவரும் அமர்ந்திருக்கிறார். கல்லூரி மாணவியும் அந்த டாக்ஸியில் ஏறி பயணித்துள்ளார்.

இளைஞரின் ஆபாச செயல்

டாக்ஸி சிறிது தூரம் சென்ற நிலையில், அந்த இளைஞர் கல்லூரி மாணவியை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். இளைஞரின் அருவருப்பான செயலால் அந்த மாணவி அதிர்ச்சியடைந்ததோடு, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

மேலும் இளைஞரின் செயலை அந்த மாணவி வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இளைஞரின் செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட நபர், பொதுபோக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியதோடு, மும்பை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு உங்களை தொடர்பு கொள்ள தகவல் வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.