ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த கொடூரம் - குழந்தை உட்பட 3 பேர் பரிதாப பலி!

Attempted Murder Kerala Crime
By Sumathi Apr 03, 2023 04:32 AM GMT
Report

ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் பயணிகள் 

ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயிலில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே இரவு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, 2 பாட்டில் பெட்ரோல் உடன் ரயிலின் உள்ளே புகுந்த மர்ம நபர் D1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகளின் மீது திடீரென பெட்ரோல் ஊற்றிய பின் தீ பற்ற வைத்துள்ளார்.

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த கொடூரம் - குழந்தை உட்பட 3 பேர் பரிதாப பலி! | Man Sets Passenger On Fire In Kerala Train 3 Dead

இதனை பார்த்த பயணிகள் அபாய சங்கிலி இழுத்து ரயிலை நிறுத்திய நேரத்தில் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீஸார் தீ காயம் அடைந்த பயணிகள் 8 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

3 பேர் பலி

இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியேற முயன்ற போது கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தீ வைத்த நபர் தப்பி செல்லும் CCTV காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக தேடி வருகின்றனர்.