ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர்

japan 30minutesslept
By Petchi Avudaiappan Sep 18, 2021 10:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர் ஜப்பானில் வசித்து வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நம் வாழ்வில் தூக்கம் என்பது நமது உடல்நலத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளில் ஒன்றாக திகழ்கிறது. ஒருநாள் தூங்கவில்லை என்றாலும் அந்த நாள் பலருக்கும் கஷ்டமான ஒன்றாக மாறிவிடும். 

ஆனால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தைசுகே ஹோரி  என்ற இளைஞர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.இவர் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் தூங்குகிறாராம். இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார்.

மேலும், தூங்கும் நேரத்தை எப்படி குறை

ப்பது என்பது குறித்து நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகிறாராம். இதுதொடர்பாக தைசுகே ஹோரி கூறும் போது, மற்றவர்களைப் போல தானும் 8 மணி நேரம் தூங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தை குறைக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன். சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட தூங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.