Monday, Jul 7, 2025

அளவுக்கு அதிகமான சுய இன்பம் , ஐசியூ அனுமதிக்கப்பட்ட 20 வயது இளைஞர்

youth hoaspital masturbating
By Irumporai 3 years ago
Irumporai

Irumporai

in உலகம்
Report

இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கும் உள்ள கேள்வி சுய இன்பம் செய்வது சரியா? தவறா? என்ற கேள்விதான் இது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை கூறி வரும் நிலையில் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் செய்து மருத்துவமனியில் அனுமதுக்கப்பட்டுள்ளார் இளைஞர் ஒருவர்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் சுய இன்பம் செய்யும் போது அதிகமான நெஞ்சு வலி மற்றும் மூச்சுதிணறலால் அவதிப்பட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் நுரையிரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  அதற்கு அவர் அதிகமாக சுய இன்பம் செய்ததும் ஒரு காரணம் என்றும். அந்த நபருக்கு சப்டென்சியஸ் எம்ப்சிமா(subcutaneous emphysema (SPM)) என்ற அறியவகை நோய் பாதிப்பு இருப்பதும் கூறப்பட்டது .

பொதுவாக இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருமல் மற்றும் வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்கள் அல்லது அதிகமாக உடலை வறுத்தும் உடல் பயிற்சி செய்பவர்களுக்கு இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅந்த இளைஞர் தற்போது ,ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார். அந்த நபருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் சுய இன்பம் அல்லது உடலுறவு தொடர்பாக இதுவரை இந்த நோய் பாதிப்பு யாருக்கும் ஏற்பட்டத்தில்லை. எனவே இந்த இளைஞருக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சிலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கூடுதலாக சில ஆய்வுகளை செய்ய அவர்கள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.