ரோல்ஸ் ராய்ஸ் காரை 44வது மாடியில் பார்க்கிங் செய்த கோடீஸ்வரர் - சுவாரஸ்ய சம்பவம்!
கோடீஸ்வரர் ஒருவர் தந்து காரை மாடியில் பார்ர்கிங் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரோல்ஸ் ராய்ஸ்
சீனாவில் உள்ள புஜியான் மாகாணத்தில் ஜியோமென் நகரில் உள்ள கோடீஸ்வரர் ஒருவர் ஒரு உயரமான கட்டிடத்தின் வது மாடியில் வசித்து வருகிறார். அண்மையில் இவர் ரூ. 32 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸின் கோஸ்ட் சீரீஸ் காரை வாங்கினார். ஆனால் இவர் உயரமான மாடியில் வசிப்பதனால் கரை பார்க்கிங் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் 44வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்க்கனியில் நிறுத்துவதற்கு முடிவெடுத்துள்ளார். ஆனால் இவ்வளவு விலைமதிப்புள்ள காரை மாடி வரை எப்படி கொண்டு செல்வது என்று யோசனை செய்தார்.
மாடியில் பார்க்கிங்
இந்நிலையில் அங்குள்ள கட்டுமான நிறுவன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து, எஃகு கேபிள்களுடன் இணைக்கப்பட்ட இரும்புக்கூண்டை தயார் செய்து அதனுள் காரை நுழைத்தார். பின்னர் கிரேன் உதவியுடன் கரை மேலே கொண்டு சென்று அவர் வீட்டின் பால்க்கனியில் காரை பார்க்கிங் செய்துள்ளார்.
இதைச் செய்து முடிக்க சுமார் 1 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் காரை சாலையில் இயக்க வேண்டும் என்றால் இதேபோல செலவழித்து மீண்டும் கிரேன் உதவியுடன்தான் காரை மீண்டும் கீழே கொண்டுவர முடியும். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.