ஆற்றில் மிதந்த சடலம்! கரைக்கு வந்த பின்னர் தனது தந்தை என அறிந்து அதிர்ச்சியில் நின்ற வீரர்

investigation rescue
By Fathima Sep 18, 2021 04:27 AM GMT
Report

நீலகிரி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர், தனது தந்தை எனத் தெரியாமல் தீயணைப்பு வீரர் மீட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கோழிபாலம் பகுதியில் வசிப்பவர் வேலுசாமி. இவர் கூடலூரில் தீயணைப்பு வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

65 வயதாகும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களில் இளைய மகன் தற்போது கூடலூரில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது தந்தை ஊருக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் நேற்று மாலை கோழிபாலம் பகுதியில் ஓடும் பாண்டியாறு புன்னம்புழா ஆற்றில் ஒரு உடல் செடிகளின் சிக்கி கரை ஒதுங்கி இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் எளிதாக உடலை கொண்டுவர முடியாத சூழ்நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்ததின் பேரில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் அங்கு வந்து ஆற்றுக்கு அந்தப் பக்கம் கயிறு கட்டி உடலை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்டது உடல் சிதைந்து நிலையில் தார்ப்பாய் மூலம் கட்டப்பட்டு சாலைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்பு உடல் மற்றும் உடையை ஆய்வுசெய்ய போது தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பாலாவின் தந்தை என்பது தெரியவந்தது.

உடலை மீட்டு வந்து அங்கு நின்றிருந்த பாலா தனது தந்தையின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தனது தந்தை என்றும் தெரியாமல் உடலை மீட்ட தீயணைப்பு வீரர் பாலாவிற்க்கு சக தீயணைப்பு வீரர்கள் ஆறுதல் கூறினர்.

இதை தொர்ந்து வழக்குப் பதிவு செய்துள்ள தேவாலா காவல்துறையினர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது சக தீயணைப்பு வீரர் இன் உடலை தாங்கள் அதை மீட்பது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இது தங்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் சக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர் .