டிக்கெட் எடுக்காததால் ஆத்திரம் - பஸ்ஸில் இருந்து பயணியை தள்ளிவிட்ட நடத்துனர்
பீகாரில் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காததால் ஆத்திரத்தில் தொழிலாளியைநடத்துனர் கீழே தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகாராஜ் தாஸ் என்ற கூலி தொழிலாளிவாரணாசியிலிருந்து சொந்த ஊருக்கு பேருந்தில் திரும்பியுள்ளார். அப்போது கையில் பணம் இல்லாததால் டிக்கெட் வாங்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து நடத்துனர் மற்றும் கூலித் தொழிலாளி தாஸுக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது ஓடிக் கொண்டிருந்த பேருந்திலிருந்து தாஸை நடத்துனர் தள்ளிவிட்டுள்ளார்.
இதில் சாலையில் விழுந்த அவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே மகாராஜ் தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் நடத்துனர் மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு பீகார் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.