மாடியில் இருந்து மனைவியை தள்ளிய கணவன் - ஆம்புலன்ஸில் வந்து புகாரளித்த பெண்!
மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரதட்சணை கொடுமை
ராணிப்பேட்டை, மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் நர்கீசு. இவருக்கும் கடலூரில் பணியாற்றி வரும் பாபா என்பவரின் மகன் காஜாரபீக்குக்கும் திருமணம் நடந்துள்ளது.
அப்போது வரதட்சணையாக, 30 சவரன் நகை, இருசக்கர வாகனத்திற்கான பணம் உள்ளிட்டவற்றை கொடுத்ததாக பெண் வீட்டார் கூறுகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு ஆம்புலன்ஸில் வந்த நர்கீஸ்,
ஐசியூவில் இளம்பெண்
கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாமனார் வீட்டில் தொல்லை செய்வதாக புகாரளித்தார். மேலும், தன்னை மொட்டை மாடியில் இருந்து கணவர் தள்ளிவிட்டதாகவும் நர்கீஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்,
காவல்துறை மற்றும் சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கீழே விழுந்ததில் இடுப்பு, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காஜாரபீக் கைது செய்யப்பட்டுள்ளார்.