தாய் போல் வேடமிட்டு மகன் தில்லுமுல்லு - எதற்காக தெரியுமா?

Italy Crime Money
By Sumathi Nov 27, 2025 11:29 AM GMT
Report

தாய் போல் வேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பென்சன் ஆசை 

இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோவைச் சேர்ந்தவர், கிராசியெல்லா டால் ஓக்லியோ. நர்சாக பணியாற்றிய இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் காலமானார்.

தாய் போல் வேடமிட்டு மகன் தில்லுமுல்லு - எதற்காக தெரியுமா? | Man Poses As Dead Mother Get Pension Italy

இந்நிலையில் ஆண்டுக்கு 83 லட்சம் ரூபாய் வரை வரும் அவருடைய ஓய்வூதியத்தை விட்டுத் தர மனமில்லாத அவருடைய 56 வயது மகன், தாயின் இறப்பை மறைத்து, மூன்று ஆண்டுகளாக அந்த ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார்.

ஆசனவாய் இல்லை; 2 அந்தரங்க உறுப்பு - பச்சிளம் குழந்தையால் அதிர்ச்சி!

ஆசனவாய் இல்லை; 2 அந்தரங்க உறுப்பு - பச்சிளம் குழந்தையால் அதிர்ச்சி!

மகன் மோசடி

சமீபத்தில் ஓய்வூதிய அடையாள அட்டை காலாவதியாகி உள்ளது. இதையடுத்து, அதை புதுப்பிக்க வரும்படி, நகராட்சி அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது. அதற்காக, லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், பழங்கால காதணிகள், விக் அணிந்து, தாயைப் போலவே வேடமிட்டு மகன் சென்றுள்ளார்.

தாய் போல் வேடமிட்டு மகன் தில்லுமுல்லு - எதற்காக தெரியுமா? | Man Poses As Dead Mother Get Pension Italy

ஆனால் அவரின் நடத்தையில் சந்தேகம் வரவே, போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், தாயின் இறப்பை மறைக்க, உடலை மம்மி போன்று பதப்படுத்தி வைத்திருப்பது தெரியவந்தது.

பின் வீட்டின் துணி அலமாரியில் மறைத்து வைத்திருந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி மகனை கைது செய்துள்ளனர்.