பெண்ணின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்யலாமா? நீதிமன்ற உத்தரவு
பெண்ணின் கன்னித்தன்மை பரிசோதனை குறித்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தீர்ப்பு கவனம் பெற்றுள்ளது.
கன்னித்தன்மை பரிசோதனை
சத்தீஸ்கரில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு தம்பதிக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து இருவரும் கோர்பா மாவட்டத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பெண், தன் கணவருக்கு ஆண்மை இல்லை. தன் செலவுகளுக்காக இடைக்காலமாக மாதம்தோறும் ரூ. 20,000 வழங்க கணவருக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேசமயம், கணவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
அதில், மனைவி அவரது உறவினருடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்துள்ளார். ஆகையால் மனைவியின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அங்கு விசாரிக்கையில், "ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை பரிசோதிக்க உத்தரவிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது. இது அந்தப் பெண்ணின் மாண்பைக் குறைப்பதாகும். அரசியலமைப்பு பிரிவு 21-ன் படி, இது அடைப்படை உரிமையை மீறுவதாகும்.
ஒரு பெண் மாண்புடன் வாழ வேண்டும், கன்னித்தன்மை பரிசோதனை நடத்துவது அதை மீறுதலாகும் என்று உத்தரவிட்டு குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.