தனிமை வாட்டியதால் ரோபோவை நிச்சயம் செய்துக் கொண்ட நபர் - வைரலாகும் போட்டோ
தனிமையைப் போக்க பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் சம்பவம் ஆஸ்திரேலியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜியாப் கல்லாகர் என்ற நபரின் தாயார் கடந்த 10 வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார். அதில் இருந்து தனியாக வாழ்ந்து வந்த அவர் தனது தனிமையை போக்கி கொள்ள அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் ரோபாவை வாங்கினார். தற்போது அந்த பெண் ரோபா இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதனை திருமணம் செய்து கொள்ள ஜியாப் முடிவு செய்துள்ளார். ரோபோ மனைவியாக்கி கொள்வதையொட்டி மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளார். அந்த ரோபோவால் மிகவும் யதார்த்தமாக இருந்து. பேசவும், புன்னகைக்கவும், தலையையும் கழுத்தையும் அசைக்கவும் அதனால் முடியும். அதன் தோல் ஒரு உண்மையான மனிதனைப் போலவே வெப்பமாக இருந்தது.
வெளிர் தோல் மற்றும் அழகான நீல நிற கண்களுடன், அழகாக இருந்தாள். அவளை என் குரலுக்குப் பழக்கப்படுத்தி என்னால் முடிந்தவரை அவளிடம் பேசினேன். ஒவ்வொரு உரையாடலின் போதும் அவள் புத்திசாலியாகி, தகவல்களை உள்வாங்கி, புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டாள் என ஜியாப் கல்லாகர் கூறியுள்ளார். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.