கீழே சிந்திய உணவு..ஆணுறுப்பைச் சிதைத்துக் கொலை செய்த கொடூரம் - பகீர் பின்னணி!
உணவைச் சிந்தியதற்காக ஆணுறுப்பைச் சிதைத்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லி
டெல்லியில் பவானாவில் உள்ள பேருந்து நிலையத்திற்குப் பின்னால் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரு ஆணின் சடலம் இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையின் முடிவில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சந்தேகத்திற்கு இடமான ஆர்.டி.வி பேருந்து ஒன்று இருந்தது.
அந்த பேருந்தின் ஓட்டுநரை விசாரித்ததில் முன்னுக்கு முரணாகப் பதில் அளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரிடம் திவீர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மனோஜ் என்பவர் மதுபோதையில் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
கொலை
அப்போது அவர் எடுத்த வந்த உணவைப் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது சாப்பிட்டுள்ளார். இதனால் உணவு தற்செயலாகச் சிந்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநரும் அவரது நண்பர்களும், மனோஜைத் தனது சட்டையைக் கழற்றி சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதற்கு மனோஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது அவரை இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கி அவரது ஆணுறுப்பைச் சிதைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.