கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் ஏறி அமர்ந்த கணவன் - சிசு வெளியேறி துடிதுடித்து பலி
கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் ஏறி கணவன் அமர்ந்ததில் மனைவி மற்றும் சிசு உயிரிழந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் காதல்
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், காசிக்குடா பகுதியில் வசித்து வருபவர் சச்சின் சத்ய நாராயணா(21). இவர் சினேகா(21) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து கடந்த 2022 ஆம் திருமணம் செய்து கொண்டனர்.
இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு வரை இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
மனைவி கொலை
சினேகா தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். தான் இல்லாத நேரத்தில் தனது மனைவி கர்ப்பமானதாக சந்தேகித்து ஆத்திரமடைந்த சச்சின், கடந்த 16 ஆம் தேதி அவரது மனைவி தூங்கி கொண்டிருக்கும் போது, அவரின் வயிற்றில் ஏறி அமர்ந்துள்ளார். மேலும் தலையணையை வைத்து முகத்தில் அழுத்தியுள்ளார்.
இதில் வயிற்றின் மீது ஏறி அமர்ந்ததில் சிசு வெளியேறி சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் சினேகா உயிரிழந்துள்ளார். தான் செய்த கொலையை, தீ விபத்தாக மாற்ற திட்டமிட்ட அவர், காஸ் சிலிண்டரின் வால்வுகளை திறந்து தீ வைத்து விட்டு தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பாக சினேகாவின் தாய் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சச்சினை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.