தகாத உறவு - மனைவியைக் கொடூரமாக கொன்று செல்பி எடுத்த கணவர்!
மனைவியைக் கொன்று கணவன் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரியா கணவரை பிரிந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகனின் உறவினர் இசக்கி என்பவருடன் பிரியாவுக்கு திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது.
கணவன் வெறிச்செயல்
மேலும், பிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை இசக்கி ராஜா பாலமுருகனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் பிரியா தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரியாவை சரமாரியாக வெட்டியுள்ளார். தொடர்ந்து அதே இடத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த பாலமுருகன்,
அதை செல்ஃபி எடுத்து “துரோகத்தின் சம்பளம் மரணம்” என்று ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதனையடுத்து போலீஸார் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.