21 மனைவிகளுடன் வாழும் பிச்சைக்காரர்

Bangladesh
By Fathima Oct 08, 2026 01:05 PM GMT
Report

Man(Moru Mia) Live With 21 Wives: பிச்சைக்காரர் ஒருவர் 21 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வரும் நிகழ்வு பெரும்பாலானவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்தவர் மொரு மியா, இவர் தான் 21 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

35 வயதான இவருக்கு மனைவிகளின் பெயர் கூட நினைவில் இல்லையாம், எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளுமாறு தான் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர்களாகவே விருப்பப்பட்டு தன்னுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

21 மனைவிகளுடன் வாழும் பிச்சைக்காரர் | Man Moru Mia Live With 21 Wives

மேலும் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் தான் கூற வேண்டும் என்றும் தன்னை திருமணம் செய்துள்ள பெண்களில் பலர் தன்னைவிட வயதில் மூத்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு சிறிய அறையில் வசித்து வரும் மொரு மியா பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு நாளும் ஒரு மனைவியுடன் பிச்சை எடுக்க செல்கிறாராம், இவரது வீடியோ வெளியாகி வைரலாக பலரும் வியப்பில் ஆழ்ந்துவிட்டனர், பலவிதமான கமெண்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.