விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல் - முதியவர் கொடுமை!

Sexual harassment Thailand Crime Flight
By Sumathi Apr 01, 2023 10:33 AM GMT
Report

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

பணிப்பெண்

தாய்லாந்து, பாங்காக்கில் இருந்து மும்பை நோக்கி 6E-1052 என்ற இன்டிகோ விமானம் புறப்பட்டு வந்துள்ளது. இதில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கலாஸ் எரிக் ஹரால்டு(63) என்ற நபர் பயணித்துள்ளார். குடிபோதையில் இருந்த இவருக்கு, விமானம் பறந்து கொண்டிருந்த போது பணிப்பெண்(24) உணவு கொடுக்க வந்துள்ளார்.

விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல் - முதியவர் கொடுமை! | Man Molests Air Hostess On Mumbai Indigo Flight

அப்போது கலாஸ், அந்த பெண் ஊழியரிடம் தவறான முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார். கடல் உணவுகள் வேண்டும் என்று பயணி கேட்க சிக்கன் தான் கிடைக்கும் என்றுள்ளார். சரி சிக்கன் தாருங்கள் என கேட்கவே அதற்கான பில் தொகை வழங்க ஏடிஎம் கார்டு ஸ்வைப் இயந்திரத்துடன் பணிப் பெண் வந்துள்ளார்.

பாலியல் சீண்டல்

அப்போது, பெண் ஊழியரின் கைகளை பிடித்து இழுத்துள்ளார். அதோடு நிற்காமல் பல பயணிகள் முன்னர் வைத்து பெண்ணை தவறான முறையில் சீண்டி தொல்லை கொடுத்துள்ளார். மேலும் திட்டியுள்ளார்.

இந்நிலையில், பதறிய பணிப்பெண் பயணி மீது புகார் கொடுத்த நிலையில் விமானம் மும்பையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அலுலர்களிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த 3 மாதங்களில் மட்டும் பயணிகள் அத்துமீறலில் ஈடுபட்டதாக 8 வழக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.