இனி காட்டுப் பக்கமே போகமாட்டேன்.. 10 நாட்கள் மலையில் சிக்கிய நபர் - உயர் பிழைத்தது எப்படி?
காட்டுப் பகுதியில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த நபர் 10 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
சாண்டா குரூஸ்
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் மெக்லீஷ். மலையேறுவதை பொழுதுபோக்காக கொண்ட இவர், தனது வீட்டின் அருகேயுள்ள சாண்டா குரூஸ் மலையில் அடிக்கடி ஏறி வந்துள்ளார்.
இதனால் அங்கிருக்கும் ஒவ்வொரு பாதையையும் நன்கு அறிந்து வைத்துள்ளார். இந்நிலையில் மெக்லீஷ் '3 மணிநேரத்தில் வந்துவிடுகிறேன்' என்று குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சமீபத்தில் அந்த மலையில் ஏறியுள்ளார்.
ஆனால், எதிர்பாரா விதமாக காட்டு தீ ஏற்பட்டு மரங்கள் கருகி காட்டின் பாதைகள் மறைந்துள்ளது. இதனால் திரும்பி வருவதற்கான பாதையை அறியமுடியாமல் 10 நாட்களாக மெக்லீஷ் திணறியுள்ளார்.
என் வாழ்க்கையில்..
மேலும், காட்டில் தனி ஒருவராக இருந்து காட்டு பெர்ரிகளையும், நீரூற்றிலிருந்து தண்ணீரையும் குடித்து உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாகியும் மெக்லீஷ் வராததால் கவலையடைந்த குடும்பத்தினர் போலீஸிடம் புகார் அளித்தனர்.
அதன் பேரில் அவரை தேடிச் சென்ற காவலர்கள் நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவரை கண்டு பிடித்தனர். மெக்லீஷை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர், 10 நாட்களாக அவர் பட்ட துயரத்தை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
இதுகுறித்து மெக்லீஷ் கூறுகையில், "தண்ணீரும் பழங்களும் என்னுடைய உயிரை காப்பாற்றியது. இனி என் வாழ்க்கையில் காட்டுப் பக்கமே செல்லமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.