புலியிடம் கடிவாங்கிய ஊழியர் - நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!

Viral Video Mexico
By Sumathi Jun 17, 2022 11:13 AM GMT
Report

மெக்சிகோவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் புலிக்கு உணவு வழங்க சென்ற ஊழியரின் கையை புலி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மிருகக்காட்சி சாலை

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது ஜோஸ் என்ற 23 வயது நபர் மெக்சிகோவின் பெரிபன் நகரிலுள்ள மிருகக்காட்சி சாலையில் பணியாற்றி வருகிறார்.

[

இங்கு சுழற்சி முறையில் ஊழியர்கள் விலங்குகளுக்கு உணவு வழங்குவது வழக்கம் சிங்கம், புலி, கரடி, முதலை போன்ற விலங்குகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருவதால், மிக கவனத்துடன் இவற்றிற்கு உணவு வழங்குவது அவசியமாகிறது.

உணவு வழங்கிய ஊழியர்

இந்நிலையில்,  ஜோஸிடம் போக அவர் மற்ற விலங்குகளுக்கு உணவு வழங்கி, அங்கு பராமரிக்கப்படும் புலி ஒன்றுக்கு உணவு வழங்க சென்றார்.

அந்த புலியும் உணவுக்காகக் காத்திருக்கவே, ஜோஸ் அதை தலை கோதிவிட்டு உணவு வழங்க தயாராக, சற்றும் எதிர்பாராத விதமாக அந்த புலி ஜோஸின் கையை கவ்வி பிடித்தது.

ரத்த வெள்ளம்

வலியோடு அலறிய ஜோஸை சக பணியாளர்கள் சேர்ந்து புலியிடமிருந்து மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே ரத்த வெள்ளத்திலிருந்தது.

மீட்கப்பட்ட ஜோஸை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையாக்கப்பட்டு வந்த நிலையில்,

மாரடைப்பு ஏற்பட்டு ஜோஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். புலியுடன் விளையாடியதால் தான் அது அவரது கையை பிடித்ததாகக் கூறிய மிருகக்காட்சி சாலையின் உரிமையாளர், இந்த இழப்புக்கு அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், சிங்கம், புலி, முதலை போன்ற விலங்குகளை வளர்ப்பதற்கான ஏற்ற சூழலோடு தான் அந்த மிருகக்காட்சி சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

வாட்டும் வறுமை.. தெருவில் சமோசா விற்கும் பத்திரிகையாளர்- வைரலாகும் புகைப்படம்!