ஒன்றாய் வாழ்ந்த காதலி; வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற காதலன் - அதிரடி திருப்பம்
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை காதலி தடுத்து நிறுத்தியுள்ளார்.
5 வருட காதல்
சிவகங்கை, காரைக்குடியைச் சேர்ந்த இளம்பெண்(28) சென்னையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். 5 வருஷத்துக்கு முன்பு கல்லல் பக்கத்தில் உள்ள வெற்றியூரில் நடந்த ஒரு விழாவில் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த இளைஞர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைஸசாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து சென்னையிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ ஆரம்பித்தார்கள்.
காதலன் மாயம்
இந்நிலையில், காதலனுக்கு வீட்டில் பெண் பார்ப்பதாக இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. உடனே, பெண் வீட்டாரிடம் தன்னுடைய காதல் குறித்தும், வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருவது குறித்தும் காதலி தெரிவித்துள்ளார்.
இதன்பின் திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் அந்த இளைஞர் மாயமானார். இதனால், பெண் தற்கொலைக்கு முயன்று தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ஆபத்தான முறையில் இளம்பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இரு குடும்பத்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.